சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்துகளில் ஆல்கஹால்?

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளில் ஆல்கஹால் அளவு குறித்து...

News image

குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்துகளில் ஆல்கஹால்? - பிரதிப் படம்

Updated On :16 ஜூலை 2026, 10:15 am IST

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் ஆல்கஹாலின் அளவு குறித்த குற்றச்சாட்டுக்கு தமிழக சுகாதாரத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் ஆல்கஹால் அளவு அதிகளவில் கலக்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளின் காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் ஆல்கஹால் அளவு 90 சதவிகிதம் இருப்பதாகவும், டாஸ்மாக்கைவிட அரசு மருத்துவமனையின் மருந்துகள் மிகுந்த போதைப்பொருளாக இருப்பதாக யூடியூபர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, யூடியூபரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக சுகாதாரத் துறை, அதற்கான விளக்கமும் அளித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில் கூறியதாவது, "பாராசிட்டமால் மருந்தைக் கரைப்பதற்காக ஆல்கஹால் பயன்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். மருந்துகளில் ஆல்கஹாலின் அளவு 10 சதவிகிதம் என்ற அளவில்தான் இருக்கும். 60 மி.லி. அளவுகொண்ட மருந்தில் 6 மி.லி. என்ற அளவில்தான் ஆல்கஹால் இருக்கும். மீதமிருக்கும் 54 மி.லி. மருந்தின் தன்மையாக இருக்கும்.

மேலும், ஆல்கஹாலின் தூயத் தன்மைதான் 95 சதவிகிதம் என்று அச்சிடப்பட்டிருக்கும்.

அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஆல்கஹால் மற்றும் மூலப்பொருள்கள் அனைத்துமே சரியான அளவினைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பொதுமக்களிடையே தவறான தகவல்களை வதந்தி பரப்ப வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளின் தரத்தை விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளது.

Summary

Is there 95% alcohol in fever medicines for children?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.