FOLLOW US

ON GOOGLE DISCOVER

சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

பழனி கோவில் நில மோசடி: குற்றச்சாட்டுகளை அடுக்கிய திமுகவின் பரந்தாமன்

பழனி கோவில் நில மோசடி குறித்து திமுகவின் முன்னாள் எம்எல்ஏ இ. பரந்தாமன் பேட்டி....

News image

இ. பரந்தாமன்

Updated On :17 ஜூலை 2026, 4:00 pm IST

பழனி கோவில் நில மோசடி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய திமுகவின் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 1.41 ஏக்கர் நிலத்தை தனியார் இருவர் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி இரண்டு அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றனர். இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது, இதை பதிவு செய்ய கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கோவில் தரப்பில் இருந்து ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை கைப்பற்றி கோவில் கார் பார்க்கிங்கிற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நிலம் இப்போது திடீரென தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியாளிக்கிறது. இதன் பின்னால் சதி நடந்துள்ளது. பினாமி பெயரில் பத்திரப்பதிவு நடந்துள்ளது.

இந்து விவகாரத்தைப் பற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசும் போது அறியாமையின் காரணமாக அதிகாரிகள் இதை பதிவு செய்திருக்கார் என கூறுகிறார். விசாரணை தொடங்காத போது அமைச்சரே முன் வந்து இப்படி சொல்வது என்பது குற்றவாளிகளை காப்பாற்றி குற்றத்தை மறைக்க அமைச்சரே துணை போகிறார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. நாங்கள் இதுபற்றி விசாரிக்கிறோம் என கூறியிருக்க வேண்டுமே தவிர தானே முன் வந்து இதுபோன்று அமைச்சர் பேசி குற்றவாளியைக் காப்பாற்றுகிறார் என்பது தான் எங்களின் குற்றச்சாட்டு.

தூய்மையான ஆட்சின்னு சொல்லக்கூடிய விஜய் அரசாங்கம் இன்னைக்கு கோயிலோட லேண்ட இன்னொருத்தருக்கு ரிஜிஸ்டர் பண்ணி கொடுத்துருக்கும்போது, நீங்க எப்படி எங்களை பார்த்து குற்றம் சுமத்த முடியும்? மக்கள் முன்னாடி வந்து உண்மையா பேசணுமே தவிர, தேவையில்லாத அரசியல் சர்ச்சைகளை உருவாக்கி பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக மட்டுமே அமைச்சர் பிரஸ் மீட் நடைபெற்றிருக்கு."வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று சொன்னால், திராவிட முன்னேற்ற கழகம் இது குறித்து நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தயங்காது."

"ஆட்டை காணம்னு சொல்லி கம்ப்ளைன்ட் கொடுக்கிறோம், அந்த கம்ப்ளைன்ட் கொடுத்த பிறகு ஆடு வந்துருச்சுன்னு சொல்லிட்டு திருடனை விட்டுற கதையாதான் இருக்கு. இவங்க என்ன பண்றாங்க, ஜஸ்ட் லைக் தட் 'லேண்ட் வந்து நாங்க மீட்டோம்'னு சொல்றாங்க. நீங்களா மீட்டிங்க? கோர்ட் ஆர்டர் மீட்டுச்சு. இந்த அப்பீல் ஏன் நீங்க டிலேவா போனீங்க?" "இதிலிருந்து எல்லாமே ஒரு முரண்பாடு இருக்கு, இது முறைகேடு இருக்கு, இதற்கு பின்னால் மிகப்பெரிய ஒரு சதி இருக்கு. 10 லட்சம், 15 லட்சம் பெருமானம் உள்ள சொத்தை வாங்குவதற்கு கூட பொருளாதார ரீதியில் பலமற்றவர்கள் என்று சொல்லப்படுகிற அந்த இருவர் இன்றைக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு இந்த சொத்தை வாங்கி இருக்கிறார்கள் என்று சொன்னா, அந்த இரண்டு கோடி ரூபாய் பணம் யாருடைய பணம்? யார் இதன் பின்னால் இருக்கிறது? ஏன் அமைச்சர்கள் முன்வந்து இவர்களை காப்பாற்ற வேண்டும்?"

விஜய் வெறும் கோட்டு சூட்டு போட்டுட்டு வந்து 'நான் 50 நாள்ல தமிழ்நாட்டில் லஞ்சத்தை ஒழிச்சிட்டேன், நான் வந்து வானத்தை வில்லாக்கிட்டேன்' என்ற சினிமா டயலாக் எல்லாம் தேவையில்லை. உங்க முதுகு பின்னாடியே மிகப்பெரிய அளவில் ஊழல் புறையோடி இருக்கிறது. ஊழலை ஒழிக்க வந்த அவதார புருஷன்'னு விஜய் சொல்றாரு. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது அது. பழனியில மொட்டை போட போவாங்க ஆனா பழனிக்கே மொட்டை போட்டுள்ளார் விஜய் என்றார்.

Summary

A massive conspiracy has taken place in the Palani temple land scam, stated former DMK MLA I. Paranthamen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.