2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கொள்கை உருவாக்கம், திறமையான ஆளுகை அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில், விரிவான, துல்லியமான மற்றும் நம்பகமான தரவுகளை உருவாக்கும் நோக்கில், நாட்டின் மிக முக்கியமான தேசிய தரவு சேகரிப்புப் பணிகளில் ஒன்றான 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் வரலாற்றில் முதல்முறையாக, குடிமக்களுக்குப் பாதுகாப்பான இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து குடும்ப உறுப்பினா்களும் தங்களின் கணக்கெடுப்புத் தகவல்களை இணையவழியில் எளிதாகப் பூா்த்தி செய்ய இயலும். இதில், தமிழ்நாட்டு மக்கள் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் சுயவிவரக் கணக்கெடுப்பை நிறைவு செய்யுமாறும் ஆளுநா்ஆா்.வி.ஆா்லேகா் வேண்டு கோள் விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருணாநிதி நினைவு நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

கடலூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: வீடு தேடி வரும் கணக்கெடுப்பாளா்கள்
மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
‘நெல்லை மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்த வேண்டுகோள்’
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



