அணைப் பிரச்னைகளுக்கு முதல்வர் விஜய் நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், முதல்வர் விஜய் தனது தோழமைக் கட்சியிடம் பேசி தமிழகத்தின் உரிமைகளைப் பெற வேண்டும்!
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் உரிமைகளையும் ஒருசேர கேள்விக்குறியாக்கும், காவிரி, மேகேதாட்டு, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணை நீர் பிரச்னைகளை வைத்து இதற்கு முந்தைய அரசு அரசியல் மட்டும் தான் செய்ததே தவிர, தீர்வு காணவில்லை. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைகளுக்காக கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் பலமுறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் எவ்வித பலனுமில்லை.
இதற்கிடையில், மேகேதாட்டு அணையை கட்டுவதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மறைமுக அனுமதி வழங்கியிருப்பதைப் போல, ஜோசப் விஜய்யின் கூட்டணிக் கட்சி தலைவரான வைகோ போன்றவர்கள் பொய் பரப்புரைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுவெளியில் பரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அறநெறியிலான அரசியலுக்கு நேர் எதிரானது.
எனவே, தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இந்த நீண்டகால பிரச்னைகளுக்கும், தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதை போல் இல்லாமல், தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தியிடம் பேசி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகம், கேரளம் மாநில முதல்வர்களின் ஒத்துழைப்போடு, இந்த அணைப் பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும்! விவசாயப் பெருமக்களின் துயர் துடைக்க வேண்டும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Summary
BJP State President Nainar Nagendran has stated that Chief Minister Vijay must find a permanent solution to the dam issues.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK
பெண்களைத் துரத்தும் தவெக நிர்வாகிகள்! சிங்கப்பெண் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? நயினார் நாகேந்திரன்

முதல்வர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் இல்லை: நயினார் நாகேந்திரன்

48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


