FOLLOW US

ON GOOGLE DISCOVER

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல் இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

முதல்வர் எச்சரித்த பிறகும்! கால்நடைத் துறை அமைச்சரின் ஆய்வு ரீல்ஸ் வைரல்! பாடல்தான் ஹைலைட்!

முதல்வரின் எச்சரித்தப் பிறகும் கால்நடைத் துறை அமைச்சர் ஆய்வு ரீல்ஸ் வெளியிட்டிருப்பது பற்றி..

News image

கால்நடைத் துறை அமைச்சரின் ஆய்வு ரீல்ஸ் - from video grab

Updated On :18 ஜூலை 2026, 10:44 am IST

கோவை: கோவை சூலூரில் அதிகாரிகளுக்கு தெரியாமல் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கமலி திடீர் ஆய்வு நடத்தியதோடு, முதல்வர் ஜோசப் விஜய்யின் எச்சரிக்கையையும் மீறி ரீல்ஸ் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.

விடியோ என்றால், அதனை பல கோணங்களில் எடுத்து, எடிட்டிங் செய்து, அதற்குப் பின்னணியில் திரையிசைப் பாடலையும் இணைத்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கமலி இன்று அதிகாரிகளுக்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு விதித்திருந்த கட்டுப்பாட்டை மீறி, இந்த ஆய்வின்போது எடுக்கப்பட்ட 'ரீல்ஸ்' வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை, செங்கதுறை வெங்கடாபுரம் மற்றும் அரசூர் ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு அமைச்சர் இன்று நேரடியாகச் சென்றார்.

உள்ளூர் அதிகாரிகள், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆகிய யாருக்குமே தகவல் தெரிவிக்கப்படாமல் இந்த ஆய்வு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது.

இந்த திடீர் ஆய்வின் போது, மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கான மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்கிறதா, மருந்துகளின் தரம் மற்றும் அவற்றின் காலாவதி தேதி சரியாக உள்ளதா என்பது குறித்தும், மருத்துவமனைப் பதிவேடுகள் (Registers) முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்றும் அமைச்சர் தீவிர தணிக்கை மேற்கொண்டார்.

இது குறித்து உள்ளூர் காவல்துறையினரிடம் கேட்டபோது, அமைச்சர் ஆய்வுக்காக இப்பகுதிக்கு வந்த விவரம் எங்களுக்கே தெரியாது என்று தெரிவித்தனர்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் யாரும் ஆய்வுக்கு செல்லும் போது அதை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் தேவையின்றி 'ரீல்ஸ்' விடியோக்களாகப் பதிவிடக் கூடாது. மக்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" என்று முதலமைச்சர் விஜய் அனைத்து அமைச்சர்களுக்கும் மிகவும் கண்டிப்புடன் அறிவுறுத்தியதாகக்கூட இல்லை நேரடியாகவே எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், முதலமைச்சர் எச்சரித்த அடுத்த நாளே, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் தனது திடீர் ஆய்வு குறித்த காட்சிகளைத் தொகுத்து, பின்னணியில் முதலமைச்சர் விஜய்யின் திரைப்படப் பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் 'ரீல்ஸ்' விடியோவாகப் பதிவிட்டுள்ளார்.

அதுவும் ஒரே காட்சியை பல இடங்களில் இருந்து விடியோவாக எடுத்து அதனை நுணுக்கமாக எடிட்டிங் செய்து, பின்னணியில் ஒரு திரையிசைப் பாடலையும் சேர்த்து அதிர விட்டுள்ளார்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலையும் மீறி, அவரது பாடலையே பின்னணி இசையாக வைத்து அமைச்சர் இந்த விடியோவை வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களிலும் தற்போதைய மிக முக்கியப் பேசும்பொருளாக மாறியுள்ளது.

மேலும் ஆய்வு செய்யப்பட்ட அந்த கால்நடை மருத்துவமனையின் உட்புறச் சுவர்கள், மேற்கூரை ஆகியவை சிதலமடைந்து காணப்படும் நிலையில் அதனை அமைச்சர் கவனிக்காமல் சென்றிருக்கிறாரே என வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Even after the Chief Minister's warning! Animal Husbandry Minister's inspection 'Reels' go viral! The song is the highlight!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.