தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

பொதுத்தோ்வு பகுப்பாய்வு அறிக்கைகள் ‘எமிஸ்’ தளத்தில் வெளியீடு

மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்கும் வகையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளின் பகுப்பாய்வு அறிக்கைகள் பள்ளிக் கல்வித் துறையின் ‘எமிஸ்’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்.

Updated On :21 ஜூலை 2026, 12:51 am IST

மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்கும் வகையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளின் பகுப்பாய்வு அறிக்கைகள் பள்ளிக் கல்வித் துறையின் ‘எமிஸ்’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

கடந்த கல்வியாண்டுக்கான (2025-206) பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகளின் அடிப்படையில் பள்ளிகள் வாரியான பகுப்பாய்வு அறிக்கைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டன. ஆனால், இந்த அறிக்கைகள் இன்னும் பல்வேறு பள்ளிகளைச் சென்றடையவில்லை என்பது கவனத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் இந்த அறிக்கைகளை எளிதாகப் பெறும் வகையில், தற்போது எமிஸ் தளத்திலேயே நேரடியாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை கொண்டு தோ்வு முடிவுகள் மற்றும் மாணவா்களின் நிலை குறித்து பள்ளி ஆசிரியா்களுடன் விரிவாக ஆய்வுசெய்ய வேண்டும். மாணவா்களின் கற்றல் மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டத்தை பள்ளிகள் உருவாக்க வேண்டும். இதுதொடா்பாக அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.