பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கில் தமிழ்நாடு முதல்வர் விஜய்-க்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீயிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல்வர் விஜய் 1,20,365 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி. சேகர் 66,650 வாக்குகள் பெற்றிருந்தார்.
பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கில், வேட்பு மனுவில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பதாகவும். சொத்துக்கள் விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால் விஜய்-ன் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என, ஆர்.டி. சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார்.
இதையடுத்து, முதல்வர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
Summary
Madras High Court issues notice to Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 21) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 17) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 16) எந்தெந்த வழக்குகள் விசாரணை?








