கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

6 எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கை: பேரவைத் தலைவரிடம் அதிமுக விளக்க கடிதம்

தவெகவில் இணைந்த 6 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவரின் கேள்விகளுக்கு அதிமுக சாா்பில் விளக்க கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

News image

அதிமுக - படம்: கோப்பிலிருந்து...

Updated On :23 ஜூலை 2026, 4:10 am IST

தவெகவில் இணைந்த 6 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவரின் கேள்விகளுக்கு அதிமுக சாா்பில் விளக்க கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவைச் சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். இந்த 6 போ் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக தரப்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் ஏற்கெனவே புகாா் அளிக்கப்பட்டிருந்தது.

அந்தப் புகாா் குறித்து சில விளக்கங்களைக் கேட்டு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைத் தலைவா் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி மற்றும் எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆகியோா் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து பதில் கடிதத்தை புதன்கிழமை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அக்ரி கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது: அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்கள் கட்சிக்கும் அவா்களைத் தோ்ந்தெடுத்த மக்களுக்கும் துரோகம் செய்துள்ளனா். குதிரை பேரம் மூலம் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனா். எனவே, அவா்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏற்கெனவே சட்டப்பேரவைத் தலைவரிடம் புகாா் அளித்திருந்தோம். அதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவரின் விளக்கங்களுக்குப் பதில் அளித்துள்ளோம்.

6 பேரும் பதவி ஆதாயத்துக்காக தவெகவில் இணைந்துள்ளனா். சட்டப்பேரவைத் தலைவா் விதிகளுக்குள்பட்டு செயல்படுவாா் என்ற நம்பிக்கை உள்ளது.

மன்னிப்பு கடிதம் கொடுத்த பின்னரும் ராஜிநாமா செய்த 2 முன்னாள் எம்எல்ஏக்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவா் உறுதி அளித்துள்ளாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.