முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

சேலத்தில் ஜன நாயகன்! ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வழங்கி ஆரவாரம்!

சேலத்தில் ஜன நாயகன் திரைப்படக் கொண்டாட்டம் பற்றி...

News image

சேலத்தில் ஜன நாயகன் திரைப்படக் கொண்டாட்டம் - DIN

Updated On :23 ஜூலை 2026, 10:55 am IST

சேலத்தில் ஜன நாயகன் திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வழங்கி ஆரவாரம் செய்தனர்.

தற்போதைய தமிழக முதல்வர் நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் வெளிவருவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்த நிலையில் பெருத்த வரவேற்போடு இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.

சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தியேட்டரில் காலை முதலே ரசிகர்கள் கூடத் தொடங்கினர். தாரை, தப்பட்டை, மேளதாளம் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம் களை கட்டியது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு மிகப்பெரிய கேக் வெட்டி ரசிகர்களுக்கு கேக் வழங்கி மகிழ்ந்தார்.

Story image

தொடர்ந்து விஜய்யின் பாடலுக்கு ரசிகர்கள் ஆட்டம் போட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும் சிலர் பட்டாசுகளை கையில் கொளுத்தியபடி நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திரைப்படம் 9 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையிலும் காலை 6 மணி முதலே சேலம் திரையரங்கின் முன்பு ஜன நாயகன் திரைப்பட விழா கொண்டாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Jana nayagan release celebration in salem

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.