கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் திரைப்படத்தை காண வந்த அமைச்சர் சம்பத்குமார், என்ன சதித்திட்டம் செய்தாலும் திரையரங்குகளில் பார்ப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி என தெரிவித்தார்.
நடிகரும் - தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நடித்து வெளியாகும் அவரது 69 ஆவது திரைப்படமான ஜன நாயகன். ஆறு மாத கால போராட்டத்திற்கு பிறகு இன்று வெளியானதை ஒட்டி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதனை நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள், தவெக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான ஜன நாயகன் திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைக் கடந்து இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியானது.
தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4.30 மணிக்கே ஜன நாயகன் திரையிடப்பட்டது.
தமிழகத்தில் காலை முதல் காட்சி 9 மணிக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கங்கா யமுனா காவேரி திரையரங்கில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டனர். இதில் டிஜே நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் விஜய்யின் பாடல்களுக்கு ஆடி பாடியும் கொண்டாடினார்.
ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னிட்டு திரையரங்கு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர். மேலும் திரையரங்கில் திரைப்படத்தை காண்பதற்கு அமைச்சர் சம்பத்குமார் வருகை புரிந்தார். அவருக்கு தவெக கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
அங்கு அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களுடன் பேசுகையில், இது எங்களுக்கு நெகிழ்ச்சியான தருணம்; முதல் நாள் காட்சி எங்களுக்கு கடைசிக் காட்சியாக தோன்றுகிறது. மனதிற்குள் வலி இருந்தாலும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து வலிகளை தாங்கிக் கொண்டு வந்துள்ளோம் என்று கூறினார்.
ரசிகன் என்பதே என்னுடைய முதல் அடையாளம் என்று கூறியவர், ஏற்கனவே முதல்வர் வகுத்த பாதையில் தான் பயணித்து கொண்டிருந்தேன்.
தற்போது எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதனை நல்லமுறையில் செயல்படுத்துவேன் என்றார். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத கொண்டாட்டங்கள் நடத்துவது வரவேற்கத்தக்கது, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தான் எங்கள் கொண்டாட்டங்கள் இருந்து வருகிறது என்றார்.
ஆன்லைனில் திரைப்படம் வெளியாகி என்ன சதித்திட்டம் செய்தாலும் திரையரங்குகளில் பார்ப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி மக்களுக்கான பணியை முதல்வர் ஆற்றி வருகிறார் என்று தெரிவித்தார்.
சென்சார் விவகாரம் குறித்தான கேள்விக்கு, குழந்தைகளும் படம் பார்க்க வேண்டும் என ஆசைபடுகிறார்கள், அது நம் கையில் இல்லை என்று கூறி படம் பார்க்க சென்றார்.
Summary
No matter what conspiracies are hatched, watching movies in theaters is what brings us joy says Minister Sampathkumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











