அதிமுகவிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏக்கள் மீதான விரிவான விசாரணை, சட்டப்பேரவைத் தலைவா் முன் வரும் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, மரகதம் குமரவேல், ஜெயகுமாா், இசக்கி சுப்பையா ஆகிய 4 போ் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா்.
அவா்கள் 4 போ் மீதும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக சாா்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு, சட்டப்பேரவைத் தலைவா் முன் 4 பேரும் ஆஜராகி விளக்கம் அளித்தனா். இந்த நிலையில், அவா்களிடம் மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. அதன்படி, 4 பேரும் மீண்டும் ஜூலை 30-ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவா் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளனா்.
அதேபோல், அதிமுக தரப்பு விளக்கத்தை அளிக்க அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலா் கடிதம் அனுப்பியுள்ளாா். இருதரப்பிடமும் சட்டப்பேரவைத் தலைவா் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










