மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவோம் என்று இசைஞானி இளையராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக இணையதளம் வழியாக சுய கணக்கெடுப்பு செய்யும் பணியானது கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியுள்ளது.
இதையொட்டி முதல்வர் ச. ஜோசப் விஜய், அவரின் சுய விவரங்களை இணையத்தில் பதிவு செய்து, பொதுமக்களையும் தங்களின் தரவுகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தங்களின் தரவுகளை இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இதுதொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) ஜூலை 17 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் காலப்பகுதியில் https://se.census.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதனைத் தொடர்ந்து ஆக. 1 முதல் ஆக. 30 ஆம் தேதி வரை நடைபெறும் வீட்டுப் பட்டியலிடல் கட்டத்தில் வருகை தரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
துல்லியமான மக்கள்தொகைத் தகவல்கள் நாட்டின் சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. அனைவரும் இணைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம்” என்றும் பதிவிட்டுள்ளார்.
Summary
Isaignani Ilaiyaraaja has appealed for the successful conduct of the census.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் பாட வேண்டும்: வைக்கம் விஜயலட்சுமி

இளையராஜா இசையமைப்பில் உருவாகும் தட்டுவண்டி!

சொந்த வாழ்வில் தாங்க முடியாத துயரம்... எஸ். ஜானகிக்கு இளையராஜா இரங்கல்!

இளையராஜா பாடலை ஜி.வி. பிரகாஷ் பயன்படுத்த தடை
விடியோக்கள்

கொளத்தூர் தொகுதி வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடக்கம்! | Kolathur | MK Stalin |



