கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நீங்களும் தொழிலதிபராகலாம்: அரசு சார்பில் 5 நாள்கள் பயிற்சி!

தமிழக அரசு சார்பில் தொழில் முனைவோர்களுக்கு 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து...

programme

தொழில் முனைவோர் பயிற்சி - கோப்புப் படம்

Published On :

தமிழக அரசு சார்பில் தொழில் முனைவோர்களுக்கு 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுவதற்கான அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகியுள்ளது.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்ததாவது:

"நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்" என்ற பெயரில் 5 நாள்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், "நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்" தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சி வரும் 15.06.2026 முதல் 19.06.2026 தேதி வரை (5 நாள்கள்) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தொழில்முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள் மற்றும் அடிப்படைகள், சந்தைப்படுத்துதல் மற்றும் பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள் - ஈஆர்பி டேலி. ஜிஎஸ்டி, இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள். மாநில தொழில் கொள்கை, எம்எஸ்எம்இ வகைப்பாடு பதிவுகளைப் பற்றி விளக்கங்கள் ஆகியவை குறித்து விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்கள்/பெண்கள்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல். 600032. கைப்பேசி எண்: 8668102600/7806918609.

மேலும், இந்தப் பயிற்சியில் பங்குபெற முன்பதிவு அவசியம் என்றும் பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தகது.

Summary

An announcement regarding a five-day training programme for entrepreneurs, conducted on behalf of the Tamil Nadu government, was issued on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.