தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

அண்ணாமலை சந்திப்பு: நயினாருக்கு அழைப்புவிடுத்த தில்லி பாஜக தலைமை!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தில்லி செல்லவுள்ளது பற்றி...

News image

அண்ணாமலை - நயினார் நாகேந்திரன். - கோப்புப்படம்

Updated On :2 ஜூன் 2026, 5:44 pm IST

தில்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனை அண்ணாமலை சந்தித்ததையடுத்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று(ஜூன் 2) பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனைச் சந்தித்து, அண்ணாமலை தனது 5 பக்க ராஜிநாமா கடிதத்தை வழங்கியதாகவும் தொடர்ந்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து இதுபற்றி விளக்கமளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தில்லி பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் உடனடியாக தில்லிக்கு வர வேண்டும் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

தமிழக பாஜக மற்றும் நயினார் நாகேந்திரன் குறித்து அண்ணாமலை பல விஷயங்களைப் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றியும் பாஜகவின் அடுத்தகட்ட நகர்வு பற்றியும் நயினார் நாகேந்திரனிடம் பாஜக தலைமை பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Annamalai meeting: Delhi BJP invites nainar nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.