விஜய்யை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை: நிர்மல் குமார்தேர்தல் பிரசார நிலையிலிருந்து முதல்வர் விஜய் வெளியே வர வேண்டும்! தமிழிசை திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்; தவெக அமைச்சரவையில் மற்ற கட்சிகள்! வைகோபாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்!
/

அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை!

தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்தது குறித்து...

News image

அமித் ஷாவுக்கு புத்தகம் பரிசளித்த அண்ணாமலை - ஏஎன்ஐ

Updated On :2 ஜூன் 2026, 4:38 pm IST

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 2) சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது பாரதியார் புத்தகத்தை அமித் ஷாவுக்கு பரிசாக வழங்கினார்.

முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை சந்தித்து, ராஜிநாமா கடிதத்தை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமித் ஷா உடனான சந்திப்பில், நயினார் நாகேந்திரன் குறித்து அண்ணாமலை புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த புகாரைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரனும் தில்லிக்குச் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, 2019 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்று பாஜகவில் இணைந்தார். ஜூலை 2021-ல் மாநில பாஜக தலைவராக பதவியேற்றார்.

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து அன்றாட செய்தியாளர்கள் சந்திப்பு, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் என தமிழக மக்களிடையே பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை வரவேற்பை பெற்றிருந்தார்.

ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில், 2025-ல் மாநிலத் தலைவர் பதவியிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை கேட்ட தொகுதி ஒதுக்கப்படாததால், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்டார்.

கட்சித் தலைவர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு கருத்து வேறுபாடு இருந்த நிலையில், மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கவுள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், தில்லிக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அண்ணாமலை இன்று காலை பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை சந்தித்து, ராஜிநாமா கடிதத்தை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றதற்கான காரணம், கட்சியின் தான் ஒதுக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து அவர் அறிக்கையாக நிதின் நவீனிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை, தமிழக பாஜகவில் நிகழும் முரண்பாடுகள் குறித்தும் தலைவர்களிடையே உள்ள அதிருப்தி குறித்தும் அமித் ஷாவிடம் விளக்கியதாகத் தெரிகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Home Minister Amit Shah meets BJP leader K Annamalai in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.