துரோகத்தை வீழ்த்துவோம்! அதிமுகவைக் கட்டிக் காப்போம்! - எடப்பாடி பழனிசாமிஅமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை! விஜய்யை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை: நிர்மல் குமார்பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? தேர்தல் பிரசார நிலையிலிருந்து முதல்வர் விஜய் வெளியே வர வேண்டும்! தமிழிசை திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்; தவெக அமைச்சரவையில் மற்ற கட்சிகள்! வைகோ
/

விஜய்யை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை: நிர்மல் குமார்

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டதாக நிர்மல் குமார் கூறியுள்ளது குறித்து...

News image

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 4:21 pm IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டதாக சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஜூன் 2) தெரிவித்தார்.

திருச்சியில் முதல்வர் விஜய்யின் பேச்சு மக்களுக்கு புரியும் என்று, இனி அடிக்கடி மக்களை முதல்வர் சந்திப்பார் எனவும் குறிப்பிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் நிர்மல் குமார் பேசியதாவது:

முதல்வர் விஜய் திருச்சியில் மக்களை சந்தித்துப் பேசியது மக்களுக்குப் புரியும். அவர் தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவதில்லை. குழந்தைகளைக் கூட கவரக்கூடிய வகையில் பேசக்கூடியவர்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முக்கிய தலைவர்கள் அனைவரையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டது. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்படவில்லை.

ஒருசிலர் தங்கள் அரசியல் சூழல் கருதி நிராகரித்தனர். அதனால் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இதை அப்போது கூறவில்லை. இப்போது விளக்க வேண்டிய இடத்தில் உள்ளதால் இதைக் கூறுகிறேன்.

முந்தைய ஆட்சியை விட இந்த ஆட்சியில் காவல் துறையினரை எளிதில் அணுக முடிவதாக மக்கள் கூறுகின்றனர்.

கஞ்சா, குட்கா விற்கின்றனர் என காவல் துறையில் கூறினால், உடனே அங்கு சென்று நடவடிக்கை எடுக்கின்றனர்.

சட்டவிரோதமான குவாரிகளுக்கு எதிராக முந்தைய ஆட்சியில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போது அவை முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத குவாரியின் ஒரு லாரியை நீங்கள் பார்க்க முடியாது.

குற்றங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட குற்றச் செயல்களுக்காக ஒட்டுமொத்தமாக சட்டம் - ஒழுங்கு சரியில்லை எனக் கூறக்கூடாது என அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.

Summary

TVK Seeks Appointment to Meet Edappadi Palaniswami Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.