தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

திண்டுக்கல் ஆட்சியராக இருந்த சரவணன் சென்னை மாநகராட்சி புதிய இணை ஆணையராக நியமனம்.

IAS Officers Transferred

கோப்புப் படம்

Published On :

ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 2) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் செயலாளராக சஜன் சிங் சவான் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ஆட்சியராக இருந்த சரவணன் சென்னை மாநகராட்சி புதிய இணை ஆணையராகவும், நிதித் துறை ஆணையராக இருந்த பிரதீவ்ராஜ் கரூர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேவக்கோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட், சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை முதன்மை செயலாளராக இருந்த ஹர்மீத் சிங் பேடி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கோபி சார் ஆட்சியர் சிவானந்தம், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியராக இருந்த சுவாதி ஸ்ரீ, திருச்சி ஊரக முகமை கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை ஆட்சியராக இருந்த சுகுமார் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநராகவும், அரியலூர் ஆட்சியராக இருந்த ரத்தினசாமி தொழில்நுட்ப கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சிமெண்ட் கழக மேலாண் இயக்குநர் அஜய் யாதவ், பால் உற்பத்தி மற்றும் டைரி மேம்பாட்டுத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் விஜயராணி, தோட்டக்கலை மற்றும் பயிர்கள் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தோட்டக்கலை மற்றும் பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்காட் நிறுவன செயல் இயக்குநராக இருந்த தீபனா விஸ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று சென்னையில் 11 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Summary

IAS Officers Transferred by tamilnadu goverment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.