நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்! 22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...

News image

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு! - கோப்புப்படம்

Updated On :2 ஜூன் 2026, 9:36 am IST

காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 4,312 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக இன்று(ஜூன் 2) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,369 கன அடியிலிருந்து 4,312 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.26 அடியிலிருந்து 79.53 அடியாக உயர்ந்துள்ளது . நீர் இருப்பு 41.49 டிஎம்சி ஆக உள்ளது.

Summary

Due to rainfall in the catchment areas of the Cauvery River, the inflow into the Mettur Dam has increased to 4,312 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.