முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்தநாளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக தலைவரும் தமிழக முதல்வருமான சி. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர்
மு. கருணாநிதியின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Chief Minister C. Joseph Vijay has extended his birthday wishes to former Chief Minister Kalaignar M. Karunanidhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருணாநிதி பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை! இன்றைய செய்திகள் ஜூன் 3 - நேரலை!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!







