முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டும் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
இது குறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “கலைஞர் மு. கருணாநிதி தமிழ்நாட்டு மக்களின் கண்ணியத்திற்காகவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர்.
அவர் முதல்வர் மட்டுமல்ல, எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளரும் ஆவார். ஒவ்வொரு இந்தியனையும் சமமாக நடத்தும் அரசிலமைப்பின் மீது அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
அவர் பிறந்தநாளுக்கு என்னுடைய பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Senior Congress leader and Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, has extended his wishes on the birthday of former Chief Minister Karunanidhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








