/

குமரி மாவட்டத்துக்கு 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

இன்றும், நாளையும் குமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான எச்சரிக்கை பற்றி..

News image

மழை - file photo

Updated On :3 ஜூன் 2026, 2:08 pm IST

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெய்யில் சுட்டெரித்துவருகின்றது. அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெய்யில் கடந்த மே 28-ஆம் தேதியோடு முடிவடைந்தாலும், வெய்யிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் குழந்தைகள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. வேலூரில் அதிகபட்சமாக 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை இன்று (ஜூன் 3) நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Meteorological Department has issued an Orange Alert for very heavy rainfall in one or two places in Kanyakumari district today and tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.