இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக இன்று (ஜூன் 4) அறிவித்துள்ளது.
ஜூன் 8 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என திமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''தில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட எஸ்.ஐ.ஆ., தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்டம், எஃப்.சி.ஆர்.ஏ. சட்டத் திருத்தம் உள்ளிட்ட - ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது.
அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது
இந்தியா கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மைய சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் நாட்டு மக்களுக்கான முக்கிய பிரச்னைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
INDIA Alliance Consultations DMK Boycotts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக இன்னொரு திராவிட இயக்கம்! - துரை வைகோ

பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!

முதுகில் குத்தி, துரோகம் செய்துள்ளது காங்கிரஸ்! திமுக கடும் கண்டனம்!!

5 மாநில பேரவைத் தேர்தல்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - முழு விவரம்!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி




