பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பெரம்பூரில் தலை இல்லாத ஆண் சடலம்: கணவரை மனைவியே கொன்றாரா?

பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் மனைவி கைது குறித்து...

Perambur Railway station

பெரம்பூர் ரயில் நிலையம் - கோப்புப்படம்

Published On :

பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் மனைவியே கொலை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலை சூட்கேஸ் ஒன்று கிடந்தநிலையில், நீண்ட நேரமாக சூட்கேஸை யாருக் எடுக்காததால், ரயில்வே காவல்துறையினர் அதனை ஆய்வு செய்தனர்.

அப்போது சுமார் 35 வயதுடைய ஆணின் தலையில்லாத சடலம் சூட்கேஸில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து, ரயில் நிலையத்தின் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ரயில்வே போலீஸார் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், கொல்லப்பட்டவரின் மனைவியே, தன் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் மனைவியையும், மனைவியின் ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டு, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Summary

Headless male body in Perambur: Did the wife kill her husband?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.