தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

டாஸ்மாக் வருவாயில் மாதந்தோறும் ரூ.102 கோடி முறைகேடு! விசாரணைக்கு முதல்வர் விஜய் உத்தரவு

டாஸ்மாக் வருவாயில் மாதத்துக்கு ரூ.102 கோடி முறைகேடு நடந்ததாக வந்த புகார் மீது விசாரணைக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image

டாஸ்மாக் கடை - Center-Center-Chennai

Updated On :8 ஜூன் 2026, 11:13 am IST

தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் வருவாயில், மாதந்தோறும் ரூ.102 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக கட்சி நிதி என்ற பெயரில் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்தது குறித்து விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தின் மதுபான நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் நடக்கும் வருவாய் முறைகேடுகள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வசூல் நடவடிக்கை மீது விரிவான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறுவதாவது, ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவுக்கு முறைசாரா வழிகள் மூலம் டாஸ்மாக் வருவாய் கட்சி நிதி என்ற பெயரில் திசை திருப்பப்பட்டு வந்ததுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மூலம் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் ரூ.3,600 கோடியைத் தொட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த அரசு அதிகாரிகள் தமிழக முதல்வர் விஜய்யிடம் கூறியதையடுத்து, புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடைய செயல்பாட்டைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் முறையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளது, நல்ல வருவாய் இருந்தாலும், தமிழக அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளி, கல்லூரிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்கி வந்த 717 மதுபான விற்பனை நிலையங்களை மூடியிருக்கிறது.

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வரும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக அரசின் கருவூலத்துக்கு வந்து சேருவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக்கின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் நீண்ட காலமாக இயங்கி வரும் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளை கலைத்துவிடவும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தர்விட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் உள்ளன.

டாஸ்மாக் கடைகளை இயக்குவது, மதுபானங்கள் கொள்முதல் மற்றும் கிடங்குகளிலிருந்து மதுபானங்களை கொண்டு வருவது, சில்லறை விற்பனை நிலையங்களின் நடவடிக்கைகள் மற்றும் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது, சில்லறை விற்பனைக் கடைகளில் பணத்தை வசூல் செய்யும் அமைப்புகள் என அனைத்திலும் ஒரு மிகப்பெரிய நிர்வாக சீரமைப்பு நடைபெறவிருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

CM Vijay orders probe into alleged monthly fraud of Rs 102 crore in TASMAC revenue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.