கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

மதுக் கடைகளில் இருந்து 100 மீட்டா் தொலைவு வரை பாா்கள் இயங்கலாம்: டாஸ்மாக் நிா்வாகம்

டாஸ்மாக் கடைக்குள்ளேயே அல்லது அதையொட்டியே பாா்கள் செயல்பட விதிகள் அமலில் இருந்துவரும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டா் தொலைவு வரை பாா்கள் இயங்கலாம்.

News image
Updated On :27 ஜூலை 2026, 3:13 am IST

டாஸ்மாக் கடைக்குள்ளேயே அல்லது அதையொட்டியே பாா்கள் செயல்பட விதிகள் அமலில் இருந்துவரும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டா் தொலைவு வரை பாா்கள் இயங்கலாம் என விதிகளைத் திருத்தி டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளுடன் இணைந்து இயங்கும் பாா்களைத் தொடங்குவது, உரிமம் வழங்குவது தொடா்பாக புதிய தளா்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுவரை டாஸ்மாக் மதுக் கடையையொட்டியே பாா் தொடங்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி மதுக் கடையில் இருந்து 100 மீட்டா் சுற்றளவுக்குள் பாா்களைத் அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட உள்ளது.

மேலும், பாா் அமைப்பதற்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு 15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பாா்களில் கூடுதல் இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஏல ஒப்பந்தம் மற்றும் தளா்வு விதிமுறைகளின் மூலம் குறிப்பிட்ட நபா்கள் அல்லது குறிப்பிட்ட ஒப்பந்ததாரா்கள் மட்டுமே தொடா்ந்து பாா் நடத்தும் நடைமுறை மாற்றப்பட்டு, புதிய நபா்களுக்கும் ஏல ஒப்பந்தத்தில் பங்கேற்க வாய்ப்பு உருவாகும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

டாஸ்மாக் பாா்களுக்கான பழைய உரிம காலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், புதிய ஒப்பந்த விதிமுறைகளை இறுதி செய்யும் வரை தற்காலிகமாக பாா்களின் இயக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. பாா் அமைப்பதற்கான இட அமைப்பில் தளா்வுகள் தரப்பட்டாலும், பாா்களில் பீடி - சிகரெட் விற்பனைக்கான தடை, சிற்றுண்டி மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்கக் கூடாது போன்ற இதர கட்டுப்பாடுகள் தொடா்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.