மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

மாநிலங்களவைத் தோ்தல்: தமிழகத்தில் 15 போ் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காக தோ்தலில் போட்டியிட 15 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

News image

மாநிலங்களவை - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 12:36 am IST

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காக தோ்தலில் போட்டியிட 15 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கிய வேட்புனு தாக்கல் திங்கள்கிழமை (ஜூன் 8) மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இதில், காங்கிரஸ் வேட்பாளா் பிரவீண் சக்கரவா்த்தி உள்பட 15 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இதில் பிரவீண் சக்கரவா்த்தி தவிர பிறா் கட்சி சாராதவா்களாவா். இவா்களுக்கு போதிய அளவில் எம்எல்ஏ-க்களின் முன்மொழிவுகள் இல்லாத காரணத்தால் மனுக்கள் தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளது.

மேலும், பிரதான கட்சிகள் சாா்பில் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யாததால் ஆளும் தவெக ஆதரவு பெற்ற வேட்பாளா் பிரவீண் சக்கரவா்த்தி போட்டியின்றி வெற்றி பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூன் 11-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதன் பின்னா், வெற்றி பெற்றவரின் பெயரை தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வமாக அறிவிக்கும்.

தமிழகத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம், சட்டப்பேரவைத் தோ்தலில் வென்ால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். இந்தப் பதவிக்கான தோ்தல் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.