உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!

மாநிலங்களவை உறுப்பினராக பிரவீண் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வாகவுள்ளது பற்றி...

Praveen chakravarty

பிரவீண் சக்ரவர்த்தி - X

Published On :

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வாகவுள்ளார்.

தமிழகத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம், சட்டப்பேரவைத் தோ்தலில் வென்றதால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.

ஜூன் 18-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள அந்த மாநிலங்களவை உறுப்பினா் இடத்தை ஆளும் தவெக, கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியது. இதன்படி, இந்தப் பதவிக்கு காங்கிரஸ் சாா்பில் பிரவீண் சக்கரவா்த்தி போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் முன்னிலையில், தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் பிரவீண் சக்கரவா்த்தி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து, மொத்தம் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில், பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனுவில் மட்டுமே 10 எம்.எல்.ஏ.க்கள் கையொப்பம் இருக்கின்றன. மற்ற 14 சுயேச்சைகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால், நாளை வேட்புமனு ஆய்வின் போது, அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, பிரவீண் சக்ரவர்த்தி போட்டியின்றி மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதாக நாளை அறிவிக்கப்படும்.

Summary

Praveen Chakravarty set to become MP unopposed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.