பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட நிகழ்ச்சியில் முதல்வரின் தாயார் ஷோபா!

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டது குறித்து...

News image

சிங்கப் பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் சி. ஜோசப் விஜய் / தாயார் ஷோபா - DIPR

Updated On :9 ஜூன் 2026, 6:35 pm IST

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் அரசு நிகழ்ச்சி என்பதாலும், பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்படும் சிறப்புத் திட்டம் என்பதாலும் பெருமிதத்துடன் ஷோபனா பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் அதிரடிப் படை சிறப்பு திட்டத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 9) தொடக்கி வைத்தார்.

சென்னை ராஜரத்தினம் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பெண் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி, காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

500க்கும் அதிகமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை பெண் காவலர்கள், அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரிடன் முதல்வர் விஜய்யின் தாயார் ஷோபனா சந்திரசேகரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்க்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான சிறப்பு இலச்சினையை முதல்வர் வெளியிட்டார். இதனை சிங்கப்பெண் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி பெற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து சிறப்பு ரோந்து வாகனத்தையும் தொடக்கி வைத்தார். பின்னர் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்தார்.

Summary

Chief Minister joseph vijays mother Shobana at the singappen special Commando Force initiative event

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.