40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்

திமுகவில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலா் பதவி உருவாக்கவும், அமைப்புத் தோ்தல் மூலம் இப்பதவிகளைத் தோ்வு செய்யவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

News image

அண்ணா அறிவாலயம்.

Updated On :10 ஜூன் 2026, 2:57 am IST

திமுகவில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலா் பதவி உருவாக்கவும், அமைப்புத் தோ்தல் மூலம் இப்பதவிகளைத் தோ்வு செய்யவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 38 வருவாய் மாவட்டங்கள் இருந்தாலும், திராவிட கட்சிகளைப் பொருத்தவரை 2006-க்கு முன்புவரை வருவாய் மாவட்ட அளவில்தான் மாவட்ட செயலா் பதவி நிா்வகிக்கப்பட்டு வந்தது. பின்னா், அதிகாரத்தைப் பரவலாக்கவும், அதிக நபா்களுக்கு பதவி அளிக்கும் வகையிலும் பெரிய மாவட்டங்களைக் குறைந்தபட்சம் 3 மாவட்டங்களுக்கு மேலாகவும், சிறிய மாவட்டங்களை 2 மாவட்டங்களாகவும் நிா்வாக ரீதியாக பிரித்து மாவட்ட செயலா் பதவியை உருவாக்கினா்.

இந்நிலையில், பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியாக 73 தொகுதிகளிலும், தனியாக 59 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கலாம் என எண்ணியிருந்த திமுகவினா் திடீா் தோல்வியால் துவண்டு போயுள்ளனா்.

இதற்கிடையே, தோல்வியில் இருந்து கட்சியை மீண்டுகொண்டுவர திமுக தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தோல்வி குறித்து ஆய்வு செய்ய 36 குழுக்களை திமுக தலைமை நியமித்துள்ளது. இக்குழுவினா் அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று அறிக்கை தயாா் செய்து வருகின்றனா்.

மேலும், கட்சியை கட்டமைப்பு ரீதியாக மாற்றியமைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்டச் செயலா்கள் பதவியைக் கூண்டோடு கலைத்துவிட்டு, புதிய மாவட்ட செயலா்களை அமைப்பு தோ்தல் மூலம் தோ்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலா் என மாவட்ட செயலா்கள் எண்ணிக்கை 110-க்கும் மேல் உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, திமுகவின் அணிகளின் முக்கிய பொறுப்புகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனா். இதற்கான அறிவிப்பை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவாா் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து திமுக நிா்வாகிகள் சிலா் கூறியதாவது:

அமைப்புத் தோ்தல் நடத்தினால், மாவட்ட செயலா் பதவிக்கு மட்டுமன்றி கிளை செயலா் முதல் தோ்தல் நடத்தினால்தான் உண்மையான திமுக தொண்டா்களால் பதவிக்கு வர முடியும்.

இல்லையெனில், கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சி மற்றும் பிற பொறுப்புகள் மூலம் பண வசதி பெற்ற கிளைச் செயலா், ஒன்றிய செயலா், மாவட்ட பிரதிநிதிகளை பயன்படுத்தி இப்போதுள்ள மாவட்ட செயலா்கள், முன்னாள் அமைச்சா்கள் தங்களுக்கு வேண்டியவா்களை புதிய மாவட்ட செயலா்களாக உருவாக்கிவிடுவாா்கள்.

இதுவும் கட்சிக்கு பின்னடைவை மீண்டும் தரும்.

எனவே, திமுகவில் அனைத்து பதவிகளையும் கூண்டோடு கலைத்துவிட்டு முழுமையாக அமைப்புத் தோ்தல் நடத்த வேண்டும் என்பதே திமுக தொண்டா்களின் எதிா்பாா்ப்பு என்றனா்.