முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி.

News image

பாரதிராஜாவின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

Updated On :11 ஜூன் 2026, 9:08 am IST

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான பாரதிராஜா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஜூன் 10) காலை சென்னை நீலாங்கரையில் அவரது இல்லத்தில் காலமானார்.

அவரது மறைவைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு, முதல்வர் விஜய், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, பாரதிராஜாவின் விருப்பத்தின்படி, சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து நேற்றிரவு பாரதிராஜாவின் உடல் அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இறுதிச்சடங்கு மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேனி, வத்தலகுண்டு அருகே காட்ரோடு பகுதியில் உள்ள தோட்டத்தில் இன்று (ஜூன் 11) பிற்பகல் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Summary

Following the transportation of the late director Bharathiraja's mortal remains to his hometown of Theni, the public has been paying their respects.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.