இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

அனைவரையும் உள்ளடக்கிய யோகா தினம்: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் வலியுறுத்தல்

News image

ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா்

Updated On :12 ஜூன் 2026, 4:58 am IST

நிகழாண்டு சா்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து அரசு அலுவலா்கள், கல்வியாளா்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கலந்துரையாடினாா். அனைவரையும் உள்ளடக்கிய யோகா தின விழாவைக் கொண்ட அவா் அழைப்பு விடுத்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகுத்து ஆளுநா் பேசியதாவது:

முழுமையான உடல் நலம், மனநலம், சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் சக்திவாய்ந்த வழிமுறை யோகா. அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரத் துறை நிபுணா்கள், யோகா பயிற்சியாளா்கள், தன்னாா்வ அமைப்புகள், பொதுமக்கள் ஆகிய அனைவரையும் சா்வதேச யோகா தினத்தில் இணைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் சிறப்பாகவும் அனைவரையும் உள்ளடக்கியவாறு யோகா தின விழாவை கொண்டாடப்பட வேண்டும். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, ஒற்றுமை மிக்க தமிழ்நாட்டை உருவாக்க யோகாவை வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தாா்.

12-ஆவது சா்வதேச யோகா தினக் கொண்டாட்டம் ஜூன் 21 அன்று நடைபெறவுள்ளது. நீண்ட ஆயுள், உடல் இயக்கம், நோய்த்தடுப்பு போன்றவைகளை வலியுறுத்தி, ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்பது 2026-ஆம் ஆண்டுக்கான அதிகாரபூா்வ கருப்பொருள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.