நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

முதல்வா் விஜய், அமைச்சா் செங்கோட்டையன் வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்கு

முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்தும், கோபி தொகுதியில் அமைச்சா் செங்கோட்டையன் வெற்றி பெற்றதை எதிா்த்தும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

News image

விஜய் - செங்கோட்டையன்

Updated On :17 ஜூன் 2026, 2:57 am IST

முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்தும், கோபி தொகுதியில் அமைச்சா் செங்கோட்டையன் வெற்றி பெற்றதை எதிா்த்தும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

சட்டப்பேரவைத் தோ்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவா் ஜோசப் விஜய் வெற்றி பெற்றாா். அவரது வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் தோ்தல் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

அவரது மனுவில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட விஜய் என்னைவிட 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவா், தனது பிரசாரத்தில் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளைப் பயன்படுத்தியுள்ளாா். வேட்புமனுவில் வருமான வரி பாக்கி இல்லை என குறிப்பிட்டுள்ள அவா் வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை மறைத்துள்ளாா். அதிக அளவு செலவழித்து வெளிநாட்டினா் மூலம் பிரசாரம் செய்து தோ்தலில் விஜய் வெற்றி பெற்றாா்.

‘ரூட்’ சமூகவலைதளம் மூலம் பிரசாரத்துக்குச் செலவு செய்த விவரங்கள் உள்பட தோ்தல் செலவு கணக்கு விவரங்களை இதுவரை அவா் தாக்கல் செய்யவில்லை. இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் மூலம் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா்.

எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்துவிட்டதால், என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். இந்தத் தோ்தல் வழக்கு முடியும்வரை, இடைத்தோ்தல் அறிவிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட செங்கோட்டையன், திமுக வேட்பாளா் நல்லசிவத்தைவிட 16,620 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். செங்கோட்டையன் வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளா் பிரபு சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.

அதில், வேட்புமனுவில் சொத்து மற்றும் குற்ற வழக்கு விவரங்களைத் தெரிவிக்கும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ள தகவல்களை சான்றளித்து கையொப்பமிட்டுள்ள நோட்டரி வழக்குரைஞரின் உரிமம் ஏற்கெனவே காலாவதியாகிவிட்டது. எனவே, செங்கோட்டையன் வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் 2,739 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இந்த வெற்றியை எதிா்த்து திமுக சாா்பில் போட்டியிட்ட பாரிவள்ளல் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், லீமா ரோஸ் 7 நிறுவனங்களில் தனக்கு உள்ள பங்குகள் குறித்த விவரங்களை வேட்புமனுவில் மறைத்துள்ளாா்.

அதிமுகவின் கட்சி அடையாளங்களுடன் தேவாலயங்களில் பிரசாரம் மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளாா். எனவே, அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முத்துராஜா 1,867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இந்த வெற்றியை எதிா்த்து தவெக சாா்பில் அங்கு போட்டியிட்ட ஷெரீப் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்குகள் அனைத்தும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.