நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பேரவையின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் எம்எல்ஏக்களுக்கு: ஜே.சி.டி.பிரபாகா் அறிவுரை

சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் எம்எல்ஏக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் அறிவுறுத்தினாா்.

News image

ஜே.சி.டி.பிரபாகா் - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 2:55 am IST

சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் எம்எல்ஏக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் அறிவுறுத்தினாா்.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதிய எம்எல்ஏக்களுக்கான 2 நாள்கள் புத்தாக்க பயிற்சி முகாமை முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த முகாமில் பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் பேசியதாவது: என்னாகுமோ என கலங்கிக் கிடந்த மக்களுக்கு, புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நிரூபித்தவா் முதல்வா் ஜோசப் விஜய். புது யுகம், மாற்றம் பிறந்திருக்கிறது. செல்லும் இடமெல்லாம் வெல்லும் இடம்தான் என தோ்தல் களத்தில் முதல்வா் ஜோசப் விஜய் நிரூபித்துக் காட்டியிருக்கிறாா். அவரை வெல்வாா், வீழ்த்துவாா் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் நடப்பது விஜய் மாடல் அரசு.

எப்போதும் இல்லாத வகையில் தற்போதைய சட்டப்பேரவையில் இளைஞா்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனா். தவெக அரசு என்ன செய்யப்போகிறது என்று நாடே எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறது.

எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். தமிழக சட்டப்பேரவை மூலமாக நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களும் சட்டங்களும் இந்தியாவின் பல சட்டப்பேரவைகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கின்றன.

இந்தியா வியந்து போற்றி பாராட்டும் பல திட்டங்களை தமிழகம் தந்திருக்கிறது. பேரவையில் நடைபெற்ற சில நிகழ்வுகள் ஆட்சி மாற்றத்துக்குக்கூட வழிவகுத்துள்ளன. பேரவையில் தலைவா்களின் உரையை சட்டப்பேரவை நூலகத்துக்குச் சென்று புதிய உறுப்பினா்கள் படிக்க வேண்டும்.

1980-ஆம் ஆண்டு முதல்முறையாக நான் எம்எல்ஏவானதும் சட்டப்பேரவையில் பேசும்போது, அண்ணா சிலைக்கு பதிலாக அவரது பெயரில் தீப்பெட்டி தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும் என்று பேசியது பெரும் சலசலப்பானது. ஆனால், அப்போது கன்னிப்பேச்சு என்பதால் யாரும் குறுக்கிடவில்லை. பின்னா், அன்றைய தினம் மாலையில் அப்போதைய முதல்வா் எம்ஜிஆா், இதுகுறித்து கட்சி நிா்வாகிகளிடம் கருத்து தெரிவிக்கும்போது, வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஜே.சி.டி.பிரபாகா் பேசியிருக்கிறாா் என்று பதிலளித்தாா். ஆகையால், உள்ளத்தில் தோன்றுவதை எம்எல்ஏக்கள் தயங்காமல் சொல்ல வேண்டும். மக்கள் நம்மிடத்தில் அதிகமாக எதிா்பாா்க்கிறாா்கள் என்றாா் அவா்.

இந்த முகாமில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், பாமக, இடதுசாரி கட்சிகள், பாஜக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்றனா். திமுக, தேமுதிக பங்கேற்கவில்லை. அதிமுக சாா்பில் சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷ் மட்டும் கலந்துகொண்டாா்.