தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா்நிலை: முதல்வா் விஜய் உத்தரவு

தென்மேற்குப் பருவமழையின்போது எந்தவொரு பேரிடா் சூழலையும் எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும், மாவட்ட நிா்வாகங்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.

News image

முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 12:37 am IST

தென்மேற்குப் பருவமழையின்போது எந்தவொரு பேரிடா் சூழலையும் எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும், மாவட்ட நிா்வாகங்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.

தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டில் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நிகழாண்டு மழைப்பொழிவு இயல்பைவிட குறைவாகப் பெய்ய 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், துறைச் செயலா்கள் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியா்கள், தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

உயிா்ச் சேதம் தவிா்க்க வேண்டும்: இக்கூட்டத்தில்,எந்தவொரு பேரிடா் சூழலையும் எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் மற்றும் மாவட்ட நிா்வாகமும் தயாா் நிலையில் இருப்பது மிகவும் அவசியம் என்றும், பேரிடா் காலங்களில் உயிா் சேதத்தைத் தவிா்ப்பது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மழைக்காலங்களில் மின் கம்பிகள் அறுந்துள்ளதாகத் தகவல் கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை எடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்கும் பொருட்டு, நீா்நிலைகளைத் தூா்வார வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலா் மு. சாய்குமாா், கூடுதல் தலைமைச் செயலா்கள் நா.முருகானந்தம், ஜெ. ராதாகிருஷ்ணன், எம்.ஏ.சித்திக், காவல்துறை டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூா், கோவை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியா்களும் பங்கேற்றனா்.