கோவை மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும் எனக் கருப்பு சட்டையுடன் அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை நடந்தது. அப்போது கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பிரபாகரன் ரமேஷ் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற வாசகம் அடங்கிய அட்டையுடன் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கவுன்சிலர் பிரபாகரன் கூறும்போது,
கோவை மாநகராட்சியில் மேயராக தி.மு.க உள்ளது. மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணியில் ஊழல் நடந்துள்ளது. ஏற்கெனவே போடப்பட்ட சாலை மீது மீண்டும் மீண்டும் சாலைகளைப் போட்டு உள்ளனர். இதனால் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று குப்பை அல்லும் பணியிலும் முறைகேடு நடக்கிறது. குப்பைகள் தள்ளப்படாத நிலையில் அதை அள்ளியது போல் காட்டுகிறார்கள்.
குப்பைக் கிடங்கு பிரச்னையிலும் முறையீடு நடந்து உள்ளது. எனவே, கோவை மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும். இந்த மாநகராட்சியைக் கலைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தொடர்ந்து கலைத்திடு கலைத்திடு மாநகராட்சியை கலைத்திடு அமைத்திடு அமைத்திடு விசாரணைக் குழு அமைத்திடு என்று இருவரும் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவர்கள் மாநகராட்சி கூட்டத்திற்குச் சென்றனர்.
AIADMK councilors, dressed in black, are raising slogans demanding the formation of a special committee to investigate the corruption within the Coimbatore Corporation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒளிராத 1,090 தெரு மின்விளக்குகளை 24 மணிநேரத்தில் சீரமைக்க உத்தரவு

பழைய கட்டடங்களை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை: சேத்துப்பட்டில் 14 கடைகளுக்கு ‘சீல்’

மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்! அதிமுகவில் இருந்து விலகிய பெஞ்சமின் பேட்டி!

மாநகராட்சியில் தொடங்கிய திட்டங்கள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




