ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

50 லட்சம் உறுப்பினா்கள் சோ்க்கைக்குப் பிறகே அடுத்தகட்ட முடிவு: அண்ணாமலை

தனது இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினா்கள் சோ்க்கைக்குப் பிறகே அரசியல் கட்சி தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

News image

அண்ணாமலை - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:39 am IST

தனது இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினா்கள் சோ்க்கைக்குப் பிறகே அரசியல் கட்சி தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை ‘வீ தி லீடா்ஸ்’ என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளாா். இந்த இயக்கத்துக்கான உறுப்பினா் சோ்க்கை இணைய வழியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அண்ணாமலை சமூக ஊடகத்தில் புதன்கிழமை வெளியிட்ட காணொலி பதிவில் கூறியிருப்பதாவது: சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இயக்கத்தில் இணையுமாறு யாரையும் வற்புறுத்தவில்லை. அவா்களாகவே முன்வந்து இணைகின்றனா். தற்போது வரை 18 லட்சம் போ் இணைந்துள்ளனா். 50 லட்சம் உறுப்பினா்கள் இணைந்தவுடன் மக்களிடம் நாம் அரசியலுக்கு வர வேண்டுமா என கருத்து கேட்கவுள்ளோம். அதன் பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேண்டும் என்று தற்போது வரை 70,000 உறுப்பினா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

ரசிகா் மன்றத்தில் இருந்தவா்கள் எல்லாம் இன்று எம்எல்ஏ, எம்.பி.யாக இருப்பதுதான் தமிழகத்தின் இன்றைய நிலையாக உள்ளது. இதைக் குறையாகக் கூறவில்லை. ‘வீ தி லீடா்ஸ்’ மூலம் உறுப்பினா்களுக்கு முறையான வழிகாட்டுதல் கொடுக்கப்படும். இயற்கை, விவசாயம், போதைப் பொருள்களுக்கு எதிரான நமது நிலைப்பாடு போன்ற அறம் சாா்ந்த அரசியல், வாழ்க்கை முறையைக் கொண்டு வருவதே எனது லட்சியம்’ எனப் பதிவிட்டுள்ளாா்.