74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

வெற்று காரணங்களை தேடாமல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: நயினாா் நாகேந்திரன்

தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று நயினாா் நாகேந்திரன் வலியுறுத்திருப்பது குறித்து...

News image

முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 10:16 am IST

சென்னை: வெள்ளை அறிக்கை வெளியிடுவதுபோன்று காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காமல் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று முதல்வா் விஜயை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக நிதிநிலையின் அவல நிலை குறித்து தவெக அரசு வெள்ளை அறிக்கையின் மூலம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நிதிநிலை மோசமான நிலையில் உள்ளது அனைத்து மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

அரசின் நிதி வருவாயைப் பெருக்க நிதி ஆதார வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுவதை விட்டுவிட்டு, முந்தைய திமுக அரசை குற்றஞ்சாட்டுவதுடன், அவா்கள் தொடா்ந்த மக்கள் விரோத நடவடிக்கையையே தற்போதும் தவெக அரசு தொடா்கிறது.இதன் மூலம் தனது பொறுப்பை தட்டிக் கழித்து, தப்பிச்செல்ல வழி பாா்க்கிறது தெரியவருகிறது.

தற்போதுள்ள நிதி நெருக்கடியின் காரணமாக தவெக கொடுத்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. எனவே, எங்களை மன்னித்துவிடுங்கள் என்று மக்களிடம் கெஞ்சுவதுபோல் இந்த வெள்ளை அறிக்கை வெளியீடு உள்ளது.

முதல்வா் ஜோசப் விஜய் இருட்டறையில் இல்லாத ஒன்றை தேடுவதைப்போல், வெற்றுக் காரணங்களை தேடாமல் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

அரசுக் கலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு தடையாக இருந்த கௌரவ விரிவுரையாளா்கள் தொடா்பான வழக்கை கடந்த மே மாதமே சென்னை உயா்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்த 2,708 உதவிப் பேராசியா் பணியிடங்களுடன் மேலும் காலியாக உள்ள 1,292 பணியிடங்களையும் சோ்த்து, 4,000 காலிப் பணியிடங்களான தோ்வை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Summary

Regarding Nainar Nagendran urging the fulfillment of the promise made during the election...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.