/

இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!

இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தது குறித்து...

News image

சி. மகேந்திரன் - படம்: தினமணி

Updated On :18 ஜூன் 2026, 6:30 pm IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் இன்று(ஜூன் 19) விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் சி. மகேந்திரன் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.

இந்திய கம்யூ. கட்சியின் மாநில துணைச் செயலராக நீண்ட காலம் பதவியில் இருந்த மகேந்திரன், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், ஆளுங்கட்சியான தவெகவில் சி. மகேந்திரன் இன்று இணைந்தார். அவர், சிவப்பு துண்டுடன் தவெகவில் தொடர்ந்து பயணிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இணைப்பு விழாவில் தொடர்ந்து அவர் பேசுகையில், ”ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை முதல்வர் விஜய் அளித்துள்ளார், அதனால்தான் தவெகவில் நான் இணைந்துள்ளேன்.

இந்தத் தேர்தலில் சாதியை ஒழித்துக்காட்டி இருக்கிறது தவெக. மகாத்மா காந்தி, பெரியார், அம்பேத்கர் போன்றோர் எடுத்த எளிய மக்களுக்கான அரசியலை இந்த இயக்கம் எடுத்துள்ளது. அதற்கான விதை போடப்பட்டுவிட்டது.

இந்தத் தேர்தலில் விஜய் பெற்ற வெற்றி தமிழ்நாட்டின் வெற்றியாக மட்டுமல்லாமல், இந்தியாவின் வெற்றியாக நான் கருதுகிறேன்” என்றார்.

Summary

Senior Communist Party of India (CPI) leader C. Mahendran joined Vijay's Tamizhaga Vettri Kazhagam today (June 19).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.