தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேசிய கீதம் நேற்று இரண்டுமுறை பாடப்பட்டது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இரண்டாம் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதில், நேற்று இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது பற்றி விவாதம் நடைபெற்றது.
திமுக தரப்பில் திமுக உறுப்பினர் சிவசங்கர் நேற்று சட்டப்பேரவையில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது எந்த தவறுமில்லை, அது வரையறுக்கத்தக்க ஒன்று என்று பதிலளித்தார்.
பின்னர், அவைத்தலைவர் ஜே.சி. பிரபாகர் குறுக்கிட்டுப் பேசும்போது,
தேசிய கீதம் எத்தனை முறை பாடப்பட்டது என குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம். ஆளுநருடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. பேரவையில் எந்த மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவைத் தலைவரான நான் பார்த்துக்கொள்வேன்.
தற்போதைய அரசுக்கு இறைவனும், மக்களின் ஆதரவும் இருக்கிறது. ஆதரவின் அடிப்படையில் அமைச்சரவை செயல்படும் என்று அவர் கூறினார்.
இதையடுத்து ஆதவ் அர்ஜுனா பேசும்போது,
வந்தே மாதரம் விவகாரத்தில் ஆளுநர் கட்டுப்பாட்டில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்கும்போது மாநில சார்பில் எந்தவித முயற்சியும் மேற்கொள்ள முடியவில்லை.
ஆனால், தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். தவெக அரசு மாநில கொள்கையில் உறுதியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
A heated debate took place in the Tamil Nadu Legislative Assembly session regarding the National Anthem being sung twice yesterday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா் : முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து; இருமுறை தேசிய கீதம்
தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது தவறல்ல: பிரேமலதா
பேரவையில் புதிய உதயம்! தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது சரித்திர நிகழ்வு! ஆளுநர் பெருமிதம்

வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல: இந்திய கம்யூனிஸ்ட்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




