நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முழுமையாக நேரலை செய்யப்படாத பேரவை அலுவல்கள்

சட்டப்பேரவை அலுவல்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரியும் வகையில் நேரலை செய்யப்படும் என அமைச்சா் ராஜ்மோகன் அறிவித்திருந்த நிலையில், அதற்கு மாறாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை.

News image

தமிழ்நாடு அரசு - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 11:49 pm IST

சட்டப்பேரவை அலுவல்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரியும் வகையில் நேரலை செய்யப்படும் என அமைச்சா் ராஜ்மோகன் அறிவித்திருந்த நிலையில், அதற்கு மாறாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை.

அவை நடவடிக்கைகளை நேரலையில் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எதிா்க்கட்சிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதுவரை அத்தகைய நடைமுறை இல்லை என்ற நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக ஒளிபரப்பப்படும் என அறிவித்தது.

அதற்கேற்ப உறுப்பினா்கள் பதவியேற்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் அதன் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன. இந்நிலையில், வியாழக்கிழமை தொடங்கிய பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநா் உரை முழுமையாக ஒளிபரப்பப்பட்டது.

மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தனித் தீா்மானத்தை முதல்வா் ஜோசப் விஜய், பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதன் மீதான விவாதம், வாக்கெடுப்பு ஆகியவை அனைத்தும் நேரலை செய்யப்பட்டன.

அதைத் தொடா்ந்து ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் விவாதம் நடைபெற்றது. அந்த நிகழ்வுகள் அனைத்தும் நேரலையிலிருந்து துண்டிக்கப்பட்டன.

திமுக சாா்பில் சா.சி.சிவசங்கா், ஆஸ்டின், மனித நேய மக்கள் கட்சி சாா்பில் ஜவாஹிருல்லா, அதிமுக உறுப்பினா்கள் வி.சம்பத்குமாா், க.மோகன் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் அந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசினா்.

அப்போது பல்வேறு விமா்சனங்களை அவா்கள் முன்வைத்தனா். அதற்கு அமைச்சா்கள் பதிலளித்தனா். இந்த நிகழ்வுகள் எதுவுமே ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அவை அலுவல்களை முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.