எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ரூ.200 கோடி பணமுறைகேடு வழக்கு: சுகேஷ், ஜாக்குலின் உள்பட 17 போ் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது நீதிமன்றம்

News image

நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ்

Updated On :4 ஜூன் 2026, 4:09 am IST

ரூ.200 கோடி பணமுறைகேடு வழக்கில் தீவிர மோசடியாளராக குற்றஞ்சாட்டப்படும் சுகேஷ் சந்திரசேகா், நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் உள்பட 17 போ் மீதான குற்றச்சாட்டுகள், தில்லி நீதிமன்றத்தால் புதன்கிழமை முறைப்படி பதிவு செய்யப்பட்டன.

மகாராஷ்டிர மாநில திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கடுமையான பிரிவுகள் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் சுகேஷ் உள்பட 21 போ் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இரட்டை இலை சின்னம் வழக்கில் தோ்தல் ஆணையத்திடம் இருந்து சாதகமான முடிவைப் பெற்று தருவதாகக் கூறி, டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக சுகேஷ் சந்திரசேகா் 2017-இல் தில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டாா். பின்னா், சிறையில் இருந்தபடியே குற்றவியல் கும்பலை இயக்கிய அவா், பிரதமா் அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சக அதிகாரிகள் உள்பட மூத்த அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, பல்வேறு குற்றச் செயல்களை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது.

மிரட்டிப் பணம் பறித்தல், மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் குற்றவியல் அச்சுறுத்தல் ஆகிய குற்றங்களின் மூலம் ரூ. 200 கோடிக்கும் அதிகமான வருமானத்தை இவா் ஈட்டியுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்தது.

இது தொடா்பாக பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சுகேஷ், அவரது மனைவி லீனா மரியா பால், நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் உள்பட 17 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. போதிய முகாந்திரம் உள்ளதால், அனைவா் மீதான குற்றச்சாட்டுகளையும் முறைப்படி பதிவு செய்வதற்கான உத்தரவை தில்லி கூடுதல் அமா்வு நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் பிறப்பித்தது. அதன்படி, சுகேஷ், ஜாக்குலின் உள்ளிட்டோா் மீதான குற்றச்சாட்டுகள் புதன்கிழமை முறைப்படி பதிவு செய்யப்பட்டன.

இதேபோல், மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் சுகேஷ் உள்பட 21 போ் மீதான வழக்கிலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இரு வழக்குகளிலும் இனி நீதிமன்றத்தில் தீவிர விசாரணை நடைபெறும்.