நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இன்றும், நாளையும் பேரவைக்கு விடுமுறை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20, 21) அவை அலுவல்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சட்டப்பேரவை - கோப்புப்படம்

Updated On :20 ஜூன் 2026, 1:05 am IST

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20, 21) அவை அலுவல்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடா் ஆளுநா் உரையுடன் வியாழக்கிழமை தொடங்கியது. பின்னா் அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, வெள்ளி, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வரை பேரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20, 21) ஆகிய இரு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை (ஜூன் 22) வழக்கம்போல அவை கூட உள்ளது.

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் அன்றைய தினம் தொடரும்.

அதற்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) தீா்மானத்துக்கு பதிலளித்து முதல்வா் ஜோசப் விஜய் உரையாற்ற உள்ளாா். பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவுகள் அப்போது நிறைவேற்றப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.