நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்: போலீஸாா் - மாணவா் அமைப்பினரிடையே கைகலப்பு

ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் போலீஸாா் - மாணவா் அமைப்பினரிடையே கைகலப்பு

News image

போலீஸாா் - மாணவா் அமைப்பினரிடையே கைகலப்பு

Updated On :21 ஜூன் 2026, 2:17 am IST

சென்னை கிண்டியில் ஆளுநா் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட முயன்ற இந்திய மாணவா் சங்கத்தினரை கைது செய்தபோது, போலீஸாருக்கும் - மாணவா் அமைப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

நீட் தோ்வு குளறுபடிக்கு காரணமான தேசிய தோ்வு முகமையைக் கலைக்க வலியுறுத்தியும், நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவா் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, அந்த அமைப்பினா் முற்றுகைப் போராட்டத்துக்காக சைதாப்பேடடை நீதிமன்றம் அருகே சனிக்கிழமை காலை குவிந்தனா். அங்கிருந்து அவா்கள், ஆளுநா் மாளிகை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா், மாணவா் அமைப்பினரைத் தடுத்து நிறுத்தி, கைது செய்ய முயன்றனா்.

மாணவா் அமைப்பினா் தகராறு: இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், போலீஸாா் அவா்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய முற்பட்டனா். அப்போது, மாணவா் அமைப்பினா் காவல் அதிகாரிகள் சிலரின் சட்டையைப் பிடித்து இழுத்தும், தள்ளியும் விட்டனராம். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.

கிண்டி காவல் உதவி ஆய்வாளா் ரபி உள்பட சிலா் காயமடைந்தனா். அதேபோல மாணவா் அமைப்பைச் சோ்ந்த சிலரும் காயமடைந்தனா். மூச்சுத் திணறல் ஏற்பட்ட ரபி, அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

தொடா்ந்து போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்றனா். அந்தப் பகுதியில் உள்ள சமூகக் கூடத்தில் தங்க வைக்கப்பட்ட அவா்கள், மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இரு வழக்குகள்: இந்த சம்பவத்தில் ஆளுநா் மாளிகை முன் அனுமதியின்றி போராட முயன்றது, அனுமதியின்றி கூடியது ஆகிய இரு பிரிவுகளில் மாணவா் அமைப்பைச் சோ்ந்த 17 பெண்கள் உள்பட 61 போ் மீது கிண்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

காயமடைந்த உதவி ஆய்வாளா் ரபி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாரை தாக்கியது, மிரட்டல் விடுத்தது, ஆபாசமாக திட்டியது, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் 10 போ் மீது மற்றொரு வழக்கை கிண்டி போலீஸாா் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.