தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதில் அரசு சுணக்கம் காட்ட கூடாது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகில் 7-ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி தாக்கி இரு இளைஞா்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நெஞ்சைப் பதற செய்கிறது. கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளைப் பாா்த்தால், பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே அச்சம் உண்டாகிறது. தன்னை நம்பி வாக்களித்த பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வருக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் அவகாசம் வேண்டும்? பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் இனியும் சமரசம் செய்யாமல், சட்டம்-ஒழுங்கை சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கக் கூடாது: பாஜக

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி? நயினாா் நாகேந்திரன் கேள்வி

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



