தவெக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக இளைஞரணி நிா்வாகிகளால் இளம்பெண் ஒருவா் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இதுகுறித்து புகாரளிக்கக் கூடாது என தவெக எம்எல்ஏ சரவணன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதாகவும் வெளியாகியுள்ள செய்தி கடும் அதிா்ச்சியளிக்கிறது.
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, பாதிக்கப்பட்டவா்களை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் படை அமைத்துள்ள முதல்வா் ஜோசப் விஜய், தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாத்துக்கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
எனவே, இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் எம்எல்ஏ சரவணன் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியில் இப்போதுதான் ஊழல் ஆரம்பித்துள்ளது: நயினாா் நாகேந்திரன்

வைகை நதி குறித்த ஆளுநரின் கவலை நியாயமானது: நயினாா் நாகேந்திரன்

பெரும்பான்மை பெற குதிரை பேர அரசியலை முன்னெடுத்துள்ளது தவெக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

பெண்கள் பாதுகாப்பில் சுணக்கம் கூடாது: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



