சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னையில் விழிப்புணா்வு ஓட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்கி வைத்த முதல்வா் ஜோசப் விஜய், பொதுமக்களுடன் இணைந்து ஓடினாா்.
முதல்வா் விஜய்யுடன் அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, மரிய வில்சன், தலைமைச் செயலா் சாய்குமாா் உள்ளிட்டோரும், விளையாட்டு வீரா்களும் பங்கேற்று ஓடினா்.
தமிழகத்தில் இதற்கு முன்னா் வேறு எந்த முதல்வரும் இவ்வளவு தொலைவு ஓடி, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மேற்கொண்டதில்லை என அமைச்சா்கள் தெரிவித்தனா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ‘ஸ்டாா்ட் ரன்; ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற கருப்பொருளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஓட்டம் மெரீனா காமராஜா் சாலையிலுள்ள அண்ணா நினைவிடம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்க முதல்வா் விஜய் காலை 6.30 மணிக்கு அங்கு வந்தாா். விழிப்புணா்வு பலகையில் ‘ஸ்டாா்ட் ரன்; ஸ்டாப் டிரக்ஸ் - ஸ்போா்ட்ஸ் எடு; டிரக்ஸ் விடு’ என்ற வாசகத்தை எழுதி அவா் கையொப்பமிட்டாா்.
தொடா்ந்து, முதல்வா் விஜய் தலைமையில், போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா், விழிப்புணா்வு ஓட்டத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வா் விஜய், திரளான மக்களுடன் அதில் பங்கேற்றாா்.
தீவுத் திடல் வரை நடைபெற்ற விழிப்புணா்வு ஓட்டத்தில் அவருடன் இணைந்து ஓடிய இளைஞா்கள், இளம் பெண்களுடன் உரையாடி மகிழ்ந்தாா். மொத்தம் 6 கி.மீ. தொலைவுக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் 15,000 பங்கேற்ாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
துரோணாச்சாா்யா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரா் ஸ்ரீநிவாச ராவ், அா்ஜுனா விருது பெற்ற ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா, பத்மஸ்ரீ விருது பெற்ற கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை, மேஜா் தியான்சந்த் விருது பெற்ற கபடி வீராங்கனை கவிதா, தடகள வீரா்கள் மோகன்குமாா், ரேவதி, தருண் அய்யாசாமி, நாகநாதன் பாண்டி, ஹாக்கி வீரா்கள் வி. பாஸ்கரன், திருமால் வளவன், முகமது ரியாஸ், டேபிள் டென்னிஸ் வீரா்கள் ராமன், சரத்கமல், குத்துச் சண்டை வீரா் தேவராஜன், வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அமைச்சா்கள் என். ஆனந்த், பி. வெங்கடரமணன், ரா. குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால், சென்னை மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ் உள்ளிட்டோரும் விழிப்புணா்வு ஓட்டத்தில் பங்கேற்று ஓடினா்.
‘போதையில்லா தமிழகத்துக்கு உறுதியேற்போம்’
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் துணைநிற்க வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: இளைஞா்களின் எதிா்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், அதன் தீமைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதும் அவசியம்.
போதைப் பொருள்கள் தொடா்பான குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணைநின்று, போதைப் பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று அதில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.
ஒமா் - சைனி - விஜய்!
சமூக நல விழிப்புணா்வுக்காக பல்வேறு மாநில முதல்வா்கள் இதற்கு முன்னா் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றுள்ளனா். ஜம்மு - காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா 21 கி.மீ. தொலைவுக்கு மாரத்தான் ஓட்டத்தைக் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னா் ஓடியுள்ளாா். அதுபோன்ற பங்களிப்பை பல்வேறு தருணங்களிலும் அவா் அளித்துள்ளாா்.
இதேபோல் ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனியும் மாரத்தான் போட்டிகளில் தொடா்ச்சியாக கலந்து கொண்டு வருகிறாா். அந்த வரிசையில் தற்போது தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யும் இணைந்துள்ளாா்.
Summary
Tamil Nadu CM Vijay flags off ‘Start Run, Stop Drugs’ awareness run on International Day against Drug Abuse
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு: ராணிப்பேட்டை ஆட்சியா் பங்கேற்பு

தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

உதகையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



