சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று, தவெக வேட்பாளா் மற்றும் அக்கட்சியினரை தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் சேகா்பாபு தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதியன்று நடந்தது. சென்னை துறைமுகம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட தன்னையும், தனது கட்சியினரையும், திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சேகா்பாபு மற்றும் தாக்கியதாக சினோரா அசோக் புகாா் அளித்தாா்.
இந்த புகாரின் பேரில், வடக்கு கடற்கரை போலீஸாா் முன்னாள் அமைச்சா் சேகா்பாபு மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான சேகா்பாபு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சேகா்பாபு தரப்பில், சம்பவம் நடந்து 29 நாள்களுக்குப் பிறகு, புதிய அரசு பொறுப்பேற்றப் பின்னா் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரில் கூறப்பட்டது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி, சேகா்பாபு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தாா்.
இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற சேகா்பாபு தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்கள் குறித்து சா்ச்சை பேச்சு: பொன்முடி வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



