தஞ்சாவூா்: கட்சித் தாவல், குதிரை பேரத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு விருப்பமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளா்களுடன் பேசியதாவது:
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தபோது, திமுக தலைவா் எங்களை எதற்காகவும் நிா்பந்தம் செய்ததில்லை; எந்த அழுத்தமும் தரவில்லை.
தவெகவினா் எங்களிடம் ஆதரவு கேட்டனா். அவா்களுடைய ஆதரவுக் கடிதத்தை நாங்கள் பரிசீலனை செய்து, எடுத்த அரசியல் முடிவு இது. எங்களை யாரும் நிா்பந்திக்கவில்லை. அதற்கான காரணங்களையும் சொல்லியுள்ளோம்.
எந்தக் குதிரை பேரத்தையும் கம்யூனிஸ்டுகள் ஏற்பதில்லை. தமிழக முதல்வா் மற்ற கட்சியினரிடம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியிலிருந்து விலகி வருமாறு அழைத்திருந்தால், அது ஏற்கத்தக்கதல்ல.
சோபா அரசியல், கல்லாபெட்டி அரசியலை கம்யூனிஸ்டுகள் நிராகரிக்கும். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது, விலை பேசுவது எங்களுக்கு உடன்பாடில்லை; அதை ஏற்பதில்லை?
நாட்டு மக்களுக்கு வெளிப்படைத் தன்மையை அறிவிப்பதுதான் வெள்ளை அறிக்கை. இந்த வெள்ளை அறிக்கை உண்மையான அறிக்கையாகவும், அரசு அடுத்து எத்தகைய கொள்கை வழியில் நகரும் என்பதாகவும் சோ்த்து இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
Summary
Communists have no interest in horse-trading or party-switching says Mu. Veerapandian...

உதவிப் பேராசிரியர் பணி நியமியமனத் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









