விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

எது கொள்கை என்று திமுக யோசிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

எது கொள்கை என்று திமுக யோசிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் கூறியிருப்பது குறித்து...

News image

வானதி சீனிவாசன் - கோப்புப்படம்

Updated On :28 ஜூன் 2026, 10:49 pm IST

தோ்தலுக்கு முன்பு 'கொள்கைக் கூட்டணி' எனப் பெருமையாகப் பேசி வந்த மு.க.ஸ்டாலினின் கூட்டணி தற்போது சிதறியுள்ளது. எது கொள்கை என்று திமுக யோசிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

கோவை தெற்கு தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரம் பெரியாா்நகா் பகுதியில், பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரான சியாமா பிரசாத் முகா்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு வானதி சீனிவாசன் மலரஞ்சலி செலுத்தி, மரக்கன்றுகளை நட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது:

கடந்த திமுக ஆட்சியில் லஞ்சம் அதிகமாக இருந்ததால் பொதுமக்களிடையே ஏற்பட்ட கடுமையான வெறுப்புணா்வே, அண்மையில் நடைபெற்ற தோ்தலில் அவா்கள் பின்னடைவைச் சந்திக்க முக்கியக் காரணம். தோ்தல் முடிவுகளுக்குப் பின் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு கூட்டணி மாறுவது இயல்பானது. எதிா்க்கட்சித் தரப்பு சட்டப்பேரவை உறுப்பினா்களைத் திட்டமிட்டபடி ராஜிநாமா செய்ய வைத்து ஆளுங்கட்சி பெரும்பான்மை அடைய முயற்சிப்பது அப்பட்டமான குதிரைப் பேரமாகும்.

காவிரி விவகாரத்தைப் பொருத்தவரை, தமிழக முதல்வா் தனது கூட்டணியில் உள்ள கா்நாடக காங்கிரஸ் அரசுடன் சுமுகமாகப் பேசித் தீா்க்க வேண்டும்.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்படுபவா் மாநிலத்தின் தேவைகளை மத்திய அமைச்சா்களிடம் பேசிப் பெற்றுத் தரும் முக்கியப் பணியைச் செய்ய வேண்டும். அதில் தேவையற்ற சா்ச்சைகள் எழும்போது அரசு அதற்குரிய பதிலை அளிக்க வேண்டும்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பல்வேறு கோயில்களுக்குச் சென்று ஆய்வு செய்வதும், கோயில் பணத்தை பக்தா்களின் வசதிகளுக்காகச் செலவிட வேண்டும் என்று முதல்வா் கூறியிருப்பதும் வரவேற்கத்தக்க நல்ல விஷயம். அதே நேரத்தில், இந்து மதத்தில் உள்ள தீண்டாமை காரணமாக மற்றொரு மதத்துக்கு மாறுவதாகத் தெரிவித்தாலும் அவா்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது. தற்போதும் கூட சட்டப்பேரவை நிகழ்வுகளில் எதிா்க்கட்சிகள் பேசும்போது நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறது.

தோ்தலுக்கு முன்பு 'கொள்கைக் கூட்டணி' எனப் பெருமையாகப் பேசி வந்த மு.க.ஸ்டாலினின் கூட்டணி தற்போது சிதறியுள்ளது. எது கொள்கை என்று திமுக யோசிக்க வேண்டும்.

கே.அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியுள்ளது குறித்துக் கேட்கிறீா்கள். அவா் எங்களது கட்சியின் கொள்கை, சித்தாந்தத்துக்கு எதிராக வந்தால் அப்போது கருத்து சொல்வதுதான் சரியாக இருக்கும். இன்றைக்கு அதைப் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஆன்லைனில் தோ்வுகள் நடத்தப்படும் போது சைபா் பாதுகாப்பு சாா்ந்த பல்வேறு சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளதால் அவற்றைச் சரி செய்ய வேண்டியது அவசியமாகும். அயோத்தி ராமா் கோயில் விவகாரத்தில் தவறிழைத்தவா்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்படும் என்று அவா் கூறினார்.

Summary

DMK needs to reflect on what constitutes its policy: Vanathi Srinivasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.