தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் வானதி சீனிவாசன் பேசியதாவது, "மற்ற கட்சிகளில் அதிருப்தியடைந்தவர்கள், தங்களுக்கு எதிர்காலம் இல்லை என நினைப்பவர்கள், கட்சிக்குள் பிரச்னையில் இருப்பவர்களெல்லாம் ஆளுங்கட்சிக்குச் செல்வது என்பது வழக்கம். அதுமட்டுமின்றி, யார் ஆட்சிக்கு வந்தாலும், மற்ற கட்சிகளிலிருந்து ஆளுங்கட்சிக்குச் செல்வதும் சாதாரணமாகவே இருக்கும்.
தங்களுடைய எம்எல்ஏ-க்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் (தவெக) ஆட்சியமைத்த குறைவான காலத்திலேயே, திட்டமிட்டு எம்எல்ஏ-க்களை ராஜிநாமா செய்யவைத்து, அவர்களின் சின்னத்தில் நிற்கவைக்க முயற்சிக்கின்றனர். இது குதிரை பேரம் இல்லாமல் வேறென்ன பேரம்?
இந்த அரசு குறைவான அனுபவம் இருந்தாலும், குதிரை பேரத்தில் இவ்வளவு வேகமாகச் செயல்படுவதைப் பார்த்தால், இவர்கள் ஜனநாயக ரீதியாகச் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது" என்று தெரிவித்தார்.
Summary
BJP Leader Vanathi Srinivasan has accused the TVK government of engaging in horse-trading
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






